சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு - மத்திய அரசு அதிரடி

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசு
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு - மத்திய அரசு அதிரடி
Published on

புதுடெல்லி:

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பின் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி என தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் அனைத்து வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 200 குறைக்கப்படுகிறது. மேலும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் விலையில் 400 ரூபாய் குறைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com