நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
Published on

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார். டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

அவரது மாசற்ற நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்.

டெல்லி கணேஷ் ஏற்று நடித்த முக்கிய கதாப்பாத்திரங்களால், அவர் என்றும் நினைவுகூரப்படுவார். நாடகத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தவர்.

அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

ஓம் சாந்தி..!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com