மருத்துவ சிகிச்சைக்காக வருகிற 23-ந் தேதி பினராய் விஜயன் மீண்டும் அமெரிக்கா பயணம்

கேரள முதல் மந்திரி பினராய் விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக 3-வது முறையாக வருகிற 23-ந் தேதி மீண்டும் அமெரிக்கா செல்கிறார்.
பினராய் விஜயன்
பினராய் விஜயன்
Published on

திருவனந்தபுரம்:

கேரள முதல் மந்திரி பினராய் விஜயன் அமெரிக்காவின் மினசோட்டாவில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 2018-ம் ஆண்டு சிகிச்சை பெற்றார். அதன்பின்பு அவர் கடந்த ஜனவரி மாதமும் அமெரிக்கா சென்றார். 

இப்போது 3-வது முறையாக அவர் அமெரிக்கா செல்ல உள்ளார். வருகிற 23-ந் தேதி அவர் மீண்டும் அமெரிக்கா செல்கிறார். இந்த முறையும் ஏற்கனவே சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரியில் உடல் நலப்பரிசோதனை செய்து கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com