போதைப்பொருள் பயன்படுத்திய விமானியை பணிநீக்கம் செய்தது ஏர் இந்தியா

இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
Published on

கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி, தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து இன்று இந்தியாவின் டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

நடுவானில் சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானம் சுமார் 300 அடி கீழே சரிந்தது. இதனால் சில பயணிகள் முன்னால் உள்ள இருக்கைகள் மீது மோதினர்.

மேலும், பயணிகள் பலரும் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். பின்னர் விமானம் சமநிலைக்கு வந்து, பத்திரமாக டெல்லியில் தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் 24 பயணிகள் காயமடைந்தனர்.

பணிநீக்க நடவடிக்கை:

இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வு பணியகம் விசாரணை நடத்தியது. இதன்படி முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தின்போது தலைமை விமானி சுதீப் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் முதற்கட்ட அறிக்கையை ஏற்று, தலைமை விமானி சுதீப்பை பணிநீக்கம் செய்து ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எக்ஸ் தள பதிவு:

"பூக்கெட்-டெல்லி விமானத்தின் தலைமை விமானிக்கு மனநிலையை மாற்றும் பொருள் ஒன்று இருந்தது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. பாதுகாப்பு, உடற்தகுதி அல்லது ஒழுங்குமுறை தேவைகளை மீறுவதில் ஏர் இந்தியாவின் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறைக்கு இணங்க, அந்த விமானியின் பணி உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது," என்று எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்து புலனாய்வு பணியகம், தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையில், 145 பயணிகளை ஏற்றி சென்ற ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானம் 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ​​அதன் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் செயலிழந்ததாக குறிப்பிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com