3-வது மனைவியை விவாகரத்து செய்வதாக பவன் கல்யாண் அறிவிப்பு

கணவன்-மனைவியாக எங்கள் வாழ்க்கை முடிந்தபோதிலும், நாங்கள் என்றும் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்து இருப்போம்.
பவன் கல்யாண்- அன்னா லெஷ்னேவா
பவன் கல்யாண்- அன்னா லெஷ்னேவா
Published on: 
Summary

பவன் கல்யாண் மற்றும் அன்னா லெஷ்னேவா 13 ஆண்டு திருமணத்தை முடிவுக்கு கொண்டு வந்து, பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்துள்ளனர். கணவன்-மனைவியாக வாழ்ந்தாலும், நல்ல நண்பர்களாக தொடர்வதற்கான உறுதியை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் மற்றும் அவரது மனைவி அன்னா லெஷ்னேவா ஆகிய இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் அவர்களின் 13 ஆண்டு கால திருமண பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.

நல்ல நண்பர்கள்

நேற்று இரவு பவன் கல்யாணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் இணைந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்,

எங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டத்தை இணைந்து கடந்த பிறகு, பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையுடன் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். கணவன்-மனைவியாக எங்கள் வாழ்க்கை முடிந்தபோதிலும், நாங்கள் என்றும் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்து இருப்போம். எங்கள் குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் எதிர்காலப் பொறுப்பே எங்களுக்கு எப்போதும் முதன்மையான முன்னுரிமையாகும். இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் தனிப்பட்ட உரிமையை அனைவரும் மதிப்பீர்கள் என்று நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

2011-ஆம் ஆண்டு வெளியான 'தீன்மார்' திரைப்படப் படப்பிடிப்பின் போது பவன் கல்யாணிற்கும், ரஷிய நாட்டைச் சேர்ந்த அன்னா லெஷ்னேவாவிற்கும் அறிமுகம் ஏற்பட்டது. தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பவன் கல்யாணிற்கு இது மூன்றாவது திருமணமாகும். முன்னதாக நந்தினி மற்றும் நடிகை ரேணு தேசாய் ஆகியோரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X