ரெயிலில் கழிவறைக்கு செல்ல 'ஸ்பைடர்மேன்'- ஆக மாறிய வாலிபர்

ரெயில் பெட்டிக்குள் நிற்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் உள்ளது. வீடியோ வைரலாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்தது.
ரெயிலில் கழிவறைக்கு செல்ல 'ஸ்பைடர்மேன்'- ஆக மாறிய வாலிபர்
Published on

இந்தியாவில் ரெயில் போக்குவரத்தை பயணிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தொலைதூர ரெயில்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடியும்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கூட்ட நெரிசல் அலைமோதிய ரெயில் பெட்டிக்குள் கழிவறைக்கு செல்வதற்காக வாலிபர் ஒருவர் 'ஸ்பைடர் மேன்' போன்று தாவி, தாவி சென்ற காட்சிகள் உள்ளது.

ரெயில் பெட்டிக்குள் நிற்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் உள்ளது. அப்போது பயணியால் சிறிது தூரம் கூட கடந்து செல்ல முடியாத நிலையில், அவர் பெட்டிக்குள் கம்பிகள் மீது ஏறியும், தாவியும் கூட்டத்தை கடந்து கழிவறை நோக்கி செல்லும் காட்சிகள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக உள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்தது. அதை பார்த்த பயனர்கள் பலரும், தங்களுக்கு ஸ்பைடர்மேன் ஞாபகம் வந்ததாக கருத்துக்களை பதிவிட்டனர். மேலும் பயனர்கள் பலரும் ரெயில் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சிறியதாக இருப்பதாகவும், இந்திய ரெயில்வேயில் நெரிசலுக்கு தீர்வு காண வேண்டிய அவசியத்தை இது வெளிப்படுத்துகிறது எனவும் பதிவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com