பப்ஜி காதலனை தேடி வந்த பாகிஸ்தான் பெண்ணின் நடனம் வைரல்

சீமா ஹைதர் நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
பப்ஜி காதலனை தேடி வந்த பாகிஸ்தான் பெண்ணின் நடனம் வைரல்
Published on

பாகிஸ்தானை சேர்ந்தவர் சீமா ஹைதர். 4 குழந்தைகளின் தாயான இவருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனால் அவர் கடந்த மே மாதம் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரையும், அவரது காதலனையும் கைது செய்த நிலையில் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசு பொருளானது.

இந்நிலையில் சீமா ஹைதர் நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் சிவப்பு நிற சேலையில் சீமா ஹைதர் நடனமாடுவது போன்ற காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ கிரேட்டர் நொய்டாவில் ரபுபுரா கிராமத்தில் உள்ள அவரது காதலன் வீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு சீமா ஹைதர் தற்போது தனது மாமியாருடன் வசித்து வருகிறார். வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com