மராத்தி கற்க ஒரு வருடம் அவகாசம் - ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு நிம்மதி அளித்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்!

அடுத்த ஓராண்டு காலத்திற்கு ஓட்டுநர்கள் மீது எந்தவித ஒழுங்குமுறை நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
மராத்தி கற்க ஒரு வருடம் அவகாசம் - ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு நிம்மதி அளித்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்!
Published on

ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மராத்தி மொழி கற்பதற்கு ஒரு வருடம் அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

கடந்தாண்டு மும்மொழிக் கொள்கை விவகாரம் தீவிரமடைந்த நிலையில், மகாராஷ்டிராவில் மராத்தி மொழி கற்றல் தொடர்பான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக அங்கு பணிபுரியும் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஓட்டுநர் உரிமம் ரத்து

அண்மையில் நடத்தப்பட்ட சோதனைகளில் மராத்தி தெரியாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு மாதத்திற்குள் மொழியைக் கற்காவிட்டால் 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.

போக்குவரத்துத் துறை அமைச்சரும் சிவசேனா தலைவருமான பிரதாப் சர்நாயக்கின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அவகாசத்தை நீட்டித்த மகாராஷ்டிர அரசு

பாஜக போக்குவரத்துப் பிரிவுத் தலைவர் ஹாஜி அராஃபத் ஷேக் தலைமையிலான ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் குழு, நேற்று முதலமைச்சர் பட்னாவிஸை சந்தித்து.

அப்போது, ஏராளமான ஓட்டுநர்களுக்கு மராத்தி பேசத் தெரியாது என்றும், வெறும் மூன்று மாதங்களில் அவர்களால் மொழியை மொத்தமாக கற்க இயலாது என்றும் நடைமுறையில் இருக்கும் சிக்கலை சுட்டிக் காட்டினர்.

இக்கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த பட்னாவிஸ்.,

“இன்று மதியம், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் அடங்கிய ஒரு குழுவினர் என்னைச் சந்தித்து, மராத்தி மொழியைக் கற்றுக்கொள்ள கூடுதல் அவகாசம் கோரினர்.

அவர்களில் பெரும்பாலானோர் அதிகம் படித்தவர்கள் அல்ல, எனவே அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படும். அவர்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்க நான் முடிவு செய்துள்ளேன். இன்றிலிருந்து ஓராண்டுக்கு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது,” என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com