ஓணம், மிலாடி நபியை முன்னிட்டு இன்று பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை!

ஆன்லைன் பேங்கிங் மற்றும் ஏடிஎம் சேவைகள் தடையின்றி வழக்கம் போல் செயல்படும்
Bank Holiday
Published on
Summary

ஓணம் மற்றும் மிலாடி நபி பண்டிகை விடுமுறைகளை முன்னிட்டு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுடெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாநிலங்களில் வங்கிகள் மூடல்?

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ விடுமுறைப் பட்டியலின்படி, இன்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், புதுடெல்லி, மணிப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்படாது என்றும், அதேசமயம் ஆன்லைன் பேங்கிங் மற்றும் ஏடிஎம் சேவைகள் தடையின்றி வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் வங்கிச் சேவைகள்

வங்கிகள் மூடப்பட்டிருக்கும் மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்கள், நேரடியாக வங்கி கிளைகளுக்குச் சென்று ரொக்கப் பணம் டெபாசிட் செய்தல் மற்றும் எடுத்தல், காசோலை தொடர்பான பணிகள், புதிய கணக்கு தொடங்குதல் மற்றும் பிற நேரடி வங்கிச் சேவைகளைப் பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மற்றும் ஏடிஎம் சேவைகள் வழக்கம் போல் செயல்படும்!

வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்களின் அவசரத் தேவைகளுக்கான தானியங்கி பணப்பரிவர்த்தனை இயந்திரங்கள், இணைய வங்கி சேவை, மொபைல் பேங்கிங் மற்றும் யுபிஐ கூகுள் பே, ஃபோன்பே போன்ற ஆன்லைன் பணப்பரிமாற்ற டிஜிட்டல் சேவைகள் எவ்வித தடங்கலும் இன்றி வழக்கம் போல் இயங்கும்.

ஒவ்வொரு மாநிலத்தின் பிராந்திய பண்டிகைகளுக்கு ஏற்ப இந்த விடுமுறைகள் மாறுபடும் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com