'மியா கலிஃபா' நீண்ட ஆயுளுடன் இருக்கணும்.. விரதம் இருந்த முதியவர் - வீடியோ வைரல்

ஆபாச பட நடிகை மியா கலிஃபா நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி அந்த முதியவர் விரதம் இருந்துள்ளார்.இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
'மியா கலிஃபா' நீண்ட ஆயுளுடன் இருக்கணும்.. விரதம் இருந்த முதியவர் -  வீடியோ வைரல்
Published on

2024 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி கர்வா சௌத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

அந்த நாளில் திருமணமான பெண்கள் தங்கள் கணவர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி சூரிய உதயம் முதல் சந்திரன் உதயம் வரை விரதம் இருப்பார்கள்

மாலை காலங்களில் கணவர்களும் தங்கள் மனைவிக்காக இந்த நாளில் விரதம் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், பீகாரை சேர்ந்த ஒரு முதியவர் கர்வா சவுத் விரதம் இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது மனைவி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி விரதம் இருப்பதற்கு பதிலாக முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபா நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி அந்த முதியவர் விரதம் இருந்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த வீடியோ பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் இத்தகைய செயல்கள் இந்து பண்டிகை மற்றும் அதன் சடங்குகளை அவமதிப்பதாக உள்ளது என்று சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com