நாங்கள் பின்வாங்கப் போவதில்லை: போராட்ட பேரணியில் இணைந்த அனைவருக்கும் நன்றி - ராகுல் காந்தி

எங்களை அடிக்கவோ, அச்சுறுத்தவோ அல்லது பயமுறுத்தவோ உங்களால் முடியாது.
Rahul Gandhi
Published on: 

உச்ச நீதிமன்றத்தை நோக்கி காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டப் பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் கொலைகாரர்களுக்கு எதிராக ஒவ்வொரு தனிமனிதரும் உறுதியாக நிற்பார்கள் என்று அவர் கூறினார்.

'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட அவர், ஆதரவு தெரிவித்த லட்சக்கணக்கான மக்களுக்கும், 'இந்தியா' கூட்டணியின் தலைவர்களுக்கும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

எக்ஸ் தள பதிவு:

"இன்று மிக முக்கியமான நாள்; ஏனெனில், இந்திய மக்கள் மிரட்டலுக்கு பணியமாட்டார்கள் என்பதை நாம் அரசுக்கு காட்ட வேண்டியிருந்தது. எங்களை அடிக்கவோ, அச்சுறுத்தவோ அல்லது பயமுறுத்தவோ உங்களால் முடியாது. அடக்குமுறையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

முந்தைய நாள் இளைஞர்களை தாக்கிக்கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். கோழைகள் எங்கே போனார்கள் என்று நான் யோசித்து கொண்டிருந்தேன். அந்த ஆட்கள் எங்கே இருந்தார்கள்? ஏனென்றால் நான் அவர்களைப் பார்க்கவில்லை.

உங்கள் அந்த சிறிய துணிகளை (சீருடை அடையாளங்களை) அணிந்துகொண்டு வெளியே வந்து என்ன நடக்கிறது என்று ஏன் பார்க்கக்கூடாது? ஏனென்றால், அடிப்படையில் நீங்களும் இந்தியாவின் பிரதமரை போலவே அடக்குமுறையாளர்கள். உங்களால் நேருக்கு நேர் நிற்க முடியாது. அதிகாரத்தை பயன்படுத்தி மட்டுமே உங்களால் சண்டையிட முடியும்," என்று மத்திய அரசை சாடியவாறு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

தனித்தனிப் போராட்டங்கள் எதுவும் இல்லை என்றும், அனைவரும் "ஒன்றாக இணைந்து" நடத்தும் ஒரே போராட்டம் இதுதான் என்றும் காந்தி வலியுறுத்தினார்.

அனைவருக்கும் நன்றி:

"ஒவ்வொரு தனிமனிதரும் நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் இந்த கொலைகாரர்களுக்கு எதிராக நிற்க போகிறார்கள். நாங்கள் பின்வாங்க போவதில்லை. வருகை தந்து எங்களுக்கு ஆதரவளித்த சிவில் சமூக அமைப்புகளை சேர்ந்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

உங்கள் ஆதரவை நாங்கள் மதிக்கிறோம், உங்கள் அனைவரையும் நாங்கள் நேசிக்கிறோம். இந்தியா, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கான விழுமியங்களை பாதுகாப்பதற்காக வெளியே வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. வீதிகளில் இறங்கி போராடிய ஒவ்வொரு நபர் குறித்தும் நான் பெருமிதம் கொள்கிறேன். நன்றி," என்று ராகுல் காந்தி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com