நீட் வேண்டாம்.. கோவையில் எய்ம்ஸ்..!- பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்க வேண்டும்.
நீட் வேண்டாம்.. கோவையில் எய்ம்ஸ்..!- பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்
Published on

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் நிறைவுபெற்றுள்ளது.

அப்போது, நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் விஜய் பேசினார்.

அப்போது அவர், முதலமைச்சர் விஜய் நீட் வேண்டாம் என கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய் கூட்டாண்மை, பகிரப்பட்ட பொறுப்புணர்வு குறித்தும் பேசினார்.

முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-

நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்துவிட்டு +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக்கல்வி சேர்க்கை வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு 2வது எய்ம்ஸ் மருத்துவமனையை கோவையில் அமைக்க அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க போதுமான நிலம் தேர்வு செய்து அளிக்கப்படும்.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும்.

ஒகேனக்கல் 3ம் ஆம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான ரூ.2,283 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

திருச்சி பஞ்சப்பூர்- ஜீயபுரம்-கரூர் பகுதி சாலையை 6 வழிச் சாலையாக மேம்படுத்த வேண்டும்.

NH-81 கரூர்-கோவை சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.

திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும்.

மாநிலங்கள் வலுப்பெறும்போது இந்தியாவும் வலிமை பெறுகிறது என்று தமிழ்நாடு உறுதியாக நம்புகிறது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரெயில் வழித்தடம் அமைக்க வேண்டும்.

இலங்கை, பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக திகழும் தமிழ்நாடு, தனது உறுதித்தன்மையையும், தொடர் வளர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறது.

பெண்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களானது சமூக வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார மாற்றத்திற்கான வலிமையான கருவிகளாக திகழ்கின்றன.

இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணி செய்யும் பெண்களில் 42% பெண்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர்.

நிதிப் பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com