நீட் மறுதேர்வு: அதிகரிக்கும் தற்கொலைகள்... மனநல ஆலோசனை எண் அறிவிப்பு!

மாணவர்களின் கனவு சிதைந்த அச்சத்தால், சோகத்தால் தற்போதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 20-ஐ தொட்டுள்ளது.
நீட் மறுதேர்வு: அதிகரிக்கும் தற்கொலைகள்... மனநல ஆலோசனை எண் அறிவிப்பு!
Published on: 

இந்தியா முழுவதும் மே.3ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு (நீட் - யுஜி) நடைபெற்றது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியிருந்த நிலையில், வினாத்தாள் கசிவுக் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அறிவிக்கப்பட்ட மறுதேர்வு நாளை மறுநாள் (ஜுன்.21) நடைபெற உள்ளது. தேசிய தேர்வு முகமை இதற்கான நுழைவு அட்டையை கடந்த 14ம் தேதி வெளியிட்டது. மேலும் இத்தேர்விற்கு கூடுதலாக 15 நிமிடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இத்தேர்தவிற்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் தயாராகி உள்ளனர்.

இதனிடையே வினாத்தாள் கசிவு என்ற அரசின் மெத்தனப்போக்கால் மருத்துவ கனவில் இருந்த பல மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுவருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை தற்போதுவரை 20-ஐ தொட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் உயிர்மாய்ப்பு எண்ணங்களிலிருந்து விடுபட மனநல ஆலோசனை பெற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 14416 அல்லது 104 எண்ணை அழைக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com