

இந்திய கடற்படையின் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் மீது, தனது முதல் முயற்சியிலேயே ரஃபேல் விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது என்றும், இது கடற்படையில் இந்த விமானத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான முதல் படியாகும் என்றும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போர் விமானத்தின் காட்சிகளையும் கடற்படை பகிர்ந்துள்ளது.
"இந்தியக் கடற்படையின் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் மீது, அக்டோபர் 29, 2026 அன்று, தனது முதல் முயற்சியிலேயே ரஃபேல் விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சோதனைகள், இந்திய கடற்படையில் இந்த விமானத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான முதல் படிகளாகும்," என்றும் கடற்படை கூறியது.