தந்தையால் 10 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை.. சிறுமிக்கு கை கொடுத்த சாட் ஜிபிடி

சிறுமியை பல தவறான செயல்களைப் பார்க்கும்படியும் தந்தை கட்டாயப்படுத்தியுள்ளார்.
தந்தையால் 10 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை.. சிறுமிக்கு கை கொடுத்த சாட் ஜிபிடி
Published on

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் சொந்தத் தந்தையாலேயே 10 ஆண்டுகளாக சிறுமி பாலியல் வன்கொடுக்குக்கு ஆளாகி வந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வரும் 55 வயது நபர் தனது மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். இவரின் மனைவி பல ஆண்டுகள் முன்பே பிள்ளைகளை கைவிட்டு சென்றுவிட்டார்.

மூன்று குழந்தைகளில் கடைசி குழந்தையான 17 வயது சிறுமி தனது 7 வயது முதல் தந்தையால் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளார்.

சாட் ஜிபிடி

தனது தந்தையால் தான் ஆளான கொடுமைகளை வெளியில் எப்படி சொல்வது என தெரியாமல் பயத்தில் வாழ்ந்து வந்த நிலையில் தனக்கு நேர்ந்ததை தனது போனில் சாட் ஜிபிடியிடம் கூறி தீர்வு கேட்டுள்ளார்.

இத்தகைய சூழலில் அதிகாரப்பூர்வமாக எங்குப் புகார் அளிக்க வேண்டும், யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்ற துல்லியமான விவரங்களையும், 1098 என்ற சைல்டு ஹெல்ப்லைன் எண்ணையும் சாட் ஜிபிடி அந்த சிறுமிக்கு வழங்கியது.

ஹெல்ப் லைன்

ஏஐ கொடுத்த ஹெல்ப்லைன் எண்ணை உடனடியாக தொடர்புகொண்டு சிறுமி விபரத்தைக் கூற, ஹெல்ப்லைன் அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டு குற்றவாளியான தந்தையைக் கைது செய்தனர்.

கடந்த ஜூன் 17 அன்று போலீசாரின் எப்ஐஆர் படி, சிறுமியை பல தவறான செயல்களைப் பார்க்கும்படியும் தந்தை கட்டாயப்படுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com