போலந்து அகதிகளின் நினைவாக மகராஷ்டிராவில் அருங்காட்சியகம்

இந்தியாவுக்கும் போலந்துக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
India Poland வரலாற்று நட்பு அருங்காட்சியகம்
கோலாப்பூர் வாலிவாடேவில் போலந்து அகதிகள் புகலிடத்தை நினைவுகூரும் மனிதநேய அருங்காட்சியகம் அமைப்பு
Published on

இரண்டாம் உலக போரின்போது போலந்து நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், புகலிடம் தேடி மகராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரிருக்கு வந்தனர்.

அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட புகலிடத்தை நினைவுகூரும் வகையில், கோலாப்பூருக்கு அருகில் உள்ள வாலிவாடேவில் ஒரு அருங்காட்சியகம் அமைய உள்ளது.

இது இந்தியாவுக்கும் போலந்துக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சகங்கா ஆற்றின் கரையில் அமைந்து, சஹ்யாத்ரி மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ள மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரம், போலந்து நாட்டுடன் மிகவும் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது.

இரண்டாம் உலகப் போர்

ஜெர்மானியப் படையெடுப்பு 1939 செப்டம்பர் 17 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுகளின் போது, 1939 முதல் 1945 வரை இரண்டாம் உலக போர் நீடித்தது.

அதன் விளைவாக ஆயிரக்கணக்கான போலந்து மக்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர். அப்போது முதன்முதலில் குஜராத்தில் சுமார் ஆயிரம் போலந்து நாட்டை சேர்ந்த அனாதை குழந்தைகளுக்கான குடியிறுப்பு ஒன்று நிறுவப்பட்டது.

பின்னர் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 5,000 மக்களுக்காக, கோலாப்பூருக்கு அருகிலுள்ள வாலிவாடேவில் போலந்து குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டது.

மகாராஷ்டிராவில் அருங்காட்சியகம்

இந்த நிலையில் போலந்து நாட்டை சேர்ந்த அகதிகளுக்கு வழங்கப்பட்ட புகலிடத்தை நினைவுகூரும் வகையில், வாலிவாடே மனிதநேய அருங்காட்சியகம் கோலாப்பூரில் அமையவிருக்கிறது.

கடந்த வாரம், போலந்து நாடாளுமன்ற உறுப்பினரும் மற்ற பிரதிநிதிகளும், கோலாப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த யுவராஜ் சம்பாஜி மகாராஜாவுடன் இணைந்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்தனர்.

கோலாப்பூர் மகாராஜா யுவராஜ் சம்பாஜி

இதையடுத்து அரச குடும்பத்தை சேர்ந்த சம்பாஜி மகாராஜா கூறுகையில், “இந்த தனித்துவமான மனிதாபிமான பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் ஆதரவளித்து வரும் மகாராஷ்டிர அரசுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

போலந்து பிரதமரும் இந்த பகிரப்பட்ட வரலாற்றை மிகவும் உயர்வாக மதிப்பதோடு, தங்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பயணத்தில் இந்தியாவை ஒரு முக்கிய உத்திசார் நட்பு நாடாகவும் கருதுகின்றனர்.

மேலும் இந்த அருங்காட்சியகம் அமைதி, கருணை மற்றும் சர்வதேச நட்புறவை ஊக்குவிப்பதோடு, இந்த பகிரப்பட்ட பாரம்பரியத்தை வருங்கால சந்ததியினருக்காக பாதுகாக்கவும் முயல்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com