சிக்கிம் ஆளுநர் நியமனத்திற்கு எதிராக களத்தில் இறங்கிய மாணவர்கள் - தீவிரமடையும் போராட்டம்

உத்தரகாண்டில் உள்ள வனந்த்ரா ரிசார்ட்டில் அலுவலக ஊழியராக 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண் பணிபுரிந்து வந்தார்.
Ankita Bhandari case
Published on: 
Summary

உத்தரகாண்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியாக கூறப்படும் பாஜக மூத்த தலைவர் துஷ்யந்த் குமார் கெளதம், சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளம்பெண் மர்மமான முறையில் கொலை

உத்தரகாண்டின் பெளரி கார்வால் மாவட்டத்தில் உள்ள வனந்த்ரா ரிசார்ட்டில் அலுவலக ஊழியராக 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண் பணிபுரிந்து வந்தார்.

இதையடுத்து கடந்த 2022-ஆம் ஆண்டு இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா மற்றும் இரண்டு ஊழியர்கள் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டு 2023-ஆம் ஆண்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை

இதைத்தொடர்ந்து அங்கிதா உயிரிழந்த வழக்கில், முக்கிய குற்றவாளி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த துஷ்யந்த் குமார் கெளதம் என்பவர் தான் என்று இளம்பெண்ணின் பெற்றோர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

அங்கிதாவின் கோரிக்கையை ஏற்று, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, 2026 ஜனவரியில் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் துஷ்யந்த் குமாரை சிக்கிம் ஆளுநராக நியமனம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாஜக தலைவர் அக்டோபர் 19-ஆம் தேதி சிக்கிம் ஆளுநராக பதவி ஏற்க உள்ளார்.

மாணவர்கள் போராட்டம்

இதையடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த இளம்பெண் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், துஷ்யந்த் குமாரை புதிய ஆளுநராக நியமனம் செய்யக்கூடாது என மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போரட்டம் குறித்து அமைப்பாளர் அஞ்சலி கூறுகையில், “இது குடிமக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சி என்றும், பங்கேற்பாளர்கள் எந்தவித அரசியல் சார்புமின்றி ஒன்றுகூடியுள்ளனர்.

மக்களின் உணர்வுகள் சில காலமாக வலுப்பெற்று வந்தன. நிறைய விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன, மேலும் மக்கள் தங்கள் நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த ஒரு தளத்தை விரும்பினர்.

அனுமதி பெறுவதற்கு நான் மற்றவர்களை சார்ந்திருக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். அதனால் நான் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் சென்றேன், அவர்கள் இங்கு போராட்டத்தை நடத்துவதற்கு எங்களுக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்தனர்.

அவர் பதவியேற்று கொண்டதால் மட்டும் எங்கள் குரல்கள் அடங்கிவிடும் என்று அர்த்தமல்ல. நாங்கள் எங்கள் கவலைகளைத் தொடர்ந்து எழுப்புவோம்.

போராட்டம் தொடரும்

தற்போது இங்கு இல்லாத பலர் இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் இதயங்கள் இந்த இயக்கத்துடனேயே உள்ளன. மக்கள்தான் அவர்களை ஆட்சியில் இருக்கச் செய்கிறார்கள்.

அவர்கள் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க விரும்பினால், மக்களின் நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள வேண்டும்.

நியமனம் நடந்தாலும், நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். நாங்கள் தொடர்ந்து அமைதியான முறையில் போராடி, எங்கள் எதிர்ப்புகளை எழுப்புவோம்,” என்று அஞ்சலி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com