பெண் பிரபலத்தை டாட்டூவாக குத்திக்கொண்ட ரசிகர்- வீடியோ

ரசிகரின் இந்த செயலுக்கு பலர் தங்களுடைய கருத்துகள் வழியாக வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். ‘இதற்குதான் கல்வி மிகவும் முக்கியமானது” உள்ளிட்டவற்றை பதிவிட்டு பெண் பிரபலத்தின் ரசிகரின் செயலை விமர்சித்து வருகிறார்கள்.
பெண் பிரபலத்தை டாட்டூவாக குத்திக்கொண்ட ரசிகர்- வீடியோ
Published on

டெல்லியில் தள்ளுவண்டியில் 'வடாபாவ்' விற்று வந்தவர் சந்திரிகா. யூடியூபர்கள் இவரையும் அவருடைய செய்முறையை தங்களுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு அவரை பிரபலமாக்கினர். இதனால் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாசிலும் அவர் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். ஒருபக்கம் புகழ் உச்சியை அடைந்தாலும் அவரின் நடவடிக்கை காரணமாக பலரால் வெறுக்கப்பட்டும் வருகிறார்.

இந்தநிலையில் சந்திரிகாவின் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் தனது முன்னங்கையில் டாட்டூவாக குத்தி உள்ளார். மேலும் பிக்பாஸ் வெற்றியாளர் எனவும் குத்திக்கொண்டு உள்ளார்.

இதுதொடர்பான வீடியோவை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். ஆனால் ரசிகரின் இந்த செயலுக்கு பலர் தங்களுடைய கருத்துகள் வழியாக வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர்.

'இதற்குதான் கல்வி மிகவும் முக்கியமானது" உள்ளிட்டவற்றை பதிவிட்டு பெண் பிரபலத்தின் ரசிகரின் செயலை விமர்சித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com