லிட்டருக்கு ரூ.4 வரை பால் விலையை உயர்த்தியது மதர் டெய்ரி!

இந்த விலையேற்றம் நாளைமுதல் அமலுக்கு வருகிறது.
லிட்டருக்கு ரூ.4 வரை பால் விலையை உயர்த்தியது மதர் டெய்ரி!
Published on: 

இந்தியாவின் முன்னணி பால் நிறுவனமான மதர் டெய்ரி பால் விலையை ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தி உள்ளது.

ஃபுல் கிரீம், டோன்டு, டபுள் டோன்டு மற்றும் பசுவின் பால் உள்ளிட்ட அனைத்து வகை பால்களின் விலையும் உயர்ந்துள்ளது.

அதன்படி, டோன்டு பாலின் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 58 -லிருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது . ஃபுல் கிரீம் பாலின் விலை முன்பு ரூ.72 ஆக இருந்தது, தற்போது ஒரு லிட்டருக்கு ரூ.76 ஆக உயர்ந்துள்ளது.

பசும்பாலின் விலையும் ஒரு லிட்டருக்கு ரூ.62- லிருந்து ரூ.65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது . இந்த விலை உயர்வு நாளைமுதல் (நவ.11) அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் கொள்முதல் விலை உயர்ந்ததால், இந்த விலையேற்றம் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் விலையை உயர்த்திருந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்த்தியுள்ளது.

ஒரு நாளைக்கு 50 லட்சம் லிட்டர்

பொது வர்த்தகம் மற்றும் இணையவழி வர்த்தகத் தளங்கள் மூலம் தினமும் சுமார் 35 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்கிறது மதர் டெய்ரி நிறுவனம். அதன் ஒட்டுமொத்த தினசரி பால் விற்பனை 50 லட்சம் லிட்டரைத் தாண்டுகிறது.

மதர் டெய்ரி தனது பால் விற்பனை வருவாயில் சுமார் 75-80 சதவீதத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறது.

X