டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

சுதந்திர தின கொண்டாட்டங்களில் முதல் முறையாக 'வந்தே மாதரம்' செங்கோட்டையில் முறைப்படி பாடப்பட உள்ளது.
PM Modi
Published on

இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று இறையாண்மை அடைந்து 79 ஆண்டுகள் ஆன நிலையில், தனது 80வது சுதந்திர தினத்தை இன்று (ஆகஸ்ட் 15, 2026) கொண்டாடுகிறது.

புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் தேசிய நினைவு கூட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார்.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் முதல் முறையாக, அதன் நீடித்த பாரம்பரியத்தின் 150 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், 'வந்தே மாதரம்' என்ற தேசிய கீதம் செங்கோட்டையில் முறைப்படி பாடப்பட உள்ளது.

மேலும், "2047-ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதில் 'யுவ சக்தி'யின் ஆற்றல் மற்றும் முக்கிய பங்களிப்பை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்வு அமையவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றுகிறார்.

அதனைத் தொடர்ந்து, அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றுவார்.

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் பாரம்பரியமாக மலர்களைத் தூவும் நிகழ்வைத் தொடர்ந்து, அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

அதன்பின், 2,500 என்.சி.சி. மாணவர்களும் 'மை பாரத்' தொண்டர்களும் 'வந்தே மாதரம்' பாடலைப் பாடுவார்கள். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படும்.

இந்த கொண்டாட்டங்களை காண, பிரதம மந்திரி முத்ரா யோஜனா தொழில்முனைவோர் மற்றும் பிரதம மந்திரி ஸ்வநிதி தெருவோர வியாபாரிகள் உட்பட சுமார் 5,000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

காந்தி நினைவிடம்

இந்த நிலையில் இன்று காலையில், டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செங்கோட்டையில் தேசியக்கொடியை பிரதமர் மோடி ஏற்றுகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com