மோடி 3.0 - இன்றே பதவியேற்கும் 30 அமைச்சர்கள்.. எந்தெந்த துறைகள் தெரியுமா?

புதிய அமைச்சரவையில் இணை அமைச்சர்களுடன் சேர்த்து 78 முதல் 81 பேர் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முக்கிய துறைகளில் பாஜகவினரே இடம்பெறுவர் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மோடி 3.0 - இன்றே பதவியேற்கும் 30 அமைச்சர்கள்.. எந்தெந்த துறைகள் தெரியுமா?
Published on

மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியான நிலையில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டம் முடிந்த பின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். இதனை தொடர்ந்து இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மோடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 7.15 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வி 8.00 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் நடைபெறும்.

முன்னதாக இன்று மோடியுடன் கேபினட் அமைசகர்களும் பதிவியேற்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அதன்படி புதிய அமைச்சரவையில் இணை அமைச்சர்களுடன் சேர்த்து 78 முதல் 81 பேர் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுள் முக்கிய இலாகாக்களான நிதி, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய துறைகளை சேர்த்து மொத்தம் 30 அமைச்சர்கள் இன்று மோடியுடன் பதவியேற்க உள்ளதா தகவல் வெளியாகியாகியுள்ளது. முக்கிய துறைகளில் பாஜகவினரே இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது.

அமையவுள்ள புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் யூகங்களும் எழத் தொடங்கியுள்ளன. இந்த முறை பாஜக ஆட்சியமைக்க 12 சீட் வைத்துள்ள நிதிஷ் குமாரின் ஆர்.ஜே.டி கட்சியும், 16 சீட் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் முக்கிய காரணமாக உள்ளதால் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கங்களுக்கு இந்த இரண்டு கட்சிகளும் அடிபோடுவதாக தெரிகிறது.

தற்போது வெளியாகியுள்ள யூகங்களின்படி, விவசாயம், பழங்குடியின நலன், சிறுபான்மையினர் நலன், கல்வி, சிறு குறு தொழித்துறை ஆகியவை தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் எல்.பி.ஜெவுக்கும், ஜவுளித் துறை, கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை ஜே.டி.யுவுக்கும், திறன் மேம்பாட்டுத் துறை ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

ஒதுக்கப்பட்ட இலாக்காக்களில் தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி, உத்தர பிரதேச மாநிலம் அப்னா தளம் கட்சியை சேர்ந்த அனுபிரியா பட்டேல், ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெய்ந்த சவுத்ரி, பீகார் மாநிலம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லாலன் சிங், லொக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், ஜித்தமன் ராம் மஞ்சி, சிவசேனாவின் பிரதாப்ராவ் ஜாதவ், ஷிராங் பர்னே ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்க வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com