அமைச்சர்கள் ரூ.60,000க்கு மேல் மொபைல் வாங்க கூடாது - ஜார்கண்ட் அரசு திட்டவட்டம்

கூடுதல் செயலாளர்கள் ரூ.30,000 வரை மொபைல் போன்கள் வாங்கலாம்.மாதத்திற்கு ரூ.3,000 வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
Jharkhand  cm
Published on

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மொத்தம் 30 புதிய முன்மொழிவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதில், ஜார்கண்ட் அரசின் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் ரூ.60,000 வரையிலான மொபைல் போன்களை வாங்கலாம் என்றும் மாதத்திற்கு ரூ.3,000 வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்ற முன்மொழிவிற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சிறப்பு செயலாளர் நிலை அதிகாரிகள் ரூ.45,000 வரை மொபைல் போன்களை வாங்கலாம் மற்றும் மாதம் ரூ 2,000 வரை ரீசார்ஜ் செய்யலாம் என்றும் கூடுதல் செயலாளர்கள், கூடுதல் இயக்குநர்கள் ரூ.30,000 வரை மொபைல் போன்கள் மற்றும் 750 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்யலாம் என்று அமைச்சரவை செயலாளர் வந்தனா தாடெல் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com