

அர்ஜென்டினா அணியும், மெஸ்சியும் கேரளம் மாநிலம் வருகை தந்து விளையாடுவதாக இருந்தது. இது தொடர்பாக அர்ஜென்டினா அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர், அர்ஜென்டினா அணி கேரளா வரவில்லை. இது தொடர்பாக பண முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதல் தகவல் அறிக்கையின்படி (FIR), RBC பிரைவேட் லிமிடெட், அதன் நிர்வாக இயக்குநர் ஆண்டோ அகஸ்டின் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேரள அரசு மற்றும் பொதுமக்களை ஏமாற்றி தங்களுக்கு முறையற்ற ஆதாயத்தை அடையும் நோக்கத்துடன் அர்ஜென்டினா கால்பந்து சங்கத்துடனான (டிசம்பர் 20, 2024 தேதியிட்ட) ஒப்பந்தத்தில் சட்ட விரோதமான மற்றும் பொய்யான அம்சங்களை சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிரேட்டர் கொச்சி மேம்பாட்டு ஆணையத்தின் (Greater Cochin Development Authority) கட்டுப்பாட்டில் உள்ள, கலூரில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான ஜவஹர்லால் நேரு சர்வதேச விளையாட்டு அரங்கத்தை RBC-யிடம் ஒப்படைப்பதற்கும், 5 கோடி ரூபாய் பிணைத் தொகையை (security deposit) தள்ளுபடி செய்வதற்கும் செப்டம்பர் 26, 2025 அன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
RBC நிறுவனம் மெஸ்சி மற்றும் அர்ஜென்டினா அணி விளையாட வருவதற்கு ஸ்பான்சராக செயல்பட முன்வந்துள்ளது. இந்த நிறுவனம் ரிப்போர்ட்டர் டி.வி. என்ற செய்தி சேனலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரிப்போர்ட்டர் டி.வி. அலுவலகம் மற்றும் அகஸ்டின் சகோதரர்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர்களுடைய பூர்வீக வீடு ஆகியவற்றில் SIT போலீசார் இன்று சோதனை நடத்தினர். கொச்சி மற்றும் வயநாடுகளில் உள்ள 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்து.
செய்திப் பிரிவு செயல்பட்டு வரும் ஆர்.பி.சி. அலுவலகத்தில் சோதனை நடத்திய போலீசார், செய்திப் பிரிவு இடத்திற்கு சென்று செய்தியாளர்களின் செல்போன்கள் மற்றும் பணிபுரிபவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்ததாகவும், செய்தி வெளியிடுவதற்கு இடையூறாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக SIT தலைவரும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியுமான பி. விஜயன் கூறுகையில் "எந்த இடத்தில் சோதனை நடத்த சென்றாலும், அங்குள்ளவர்களிடம் போனை பயன்படுத்தக்கூடாது என சொல்லி வாங்கி வைத்து விடுவோம். நாங்கள் ஒரு போனைக் கூட பறிமுதல் செய்யவில்லை. செய்தி ரூமுக்குள் இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செல்லவில்லை. ஆவணங்களை சேகரிப்பதே எங்களுடைய நோக்கம். டிஜிட்டல் லாக்கர்களில் ஏற்பட்ட அணுகல் சிக்கல் காரணமாக, தேடுதலுக்கு அதிக நேரம் பிடித்தது. இந்த நடவடிக்கைகள் வீடியோவும் பதிவு செய்யப்பட்டன.
சோதனைப் பதிவேட்டின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட நபர்களின் கையொப்பங்களைப் பெறுகிறோம். அந்தப் பதிவேட்டைப் பார்த்து, ஏதேனும் பத்திரிகையாளர்களின் அலைபேசிகளை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோமா என்று பாருங்கள்" என்றார்.
இந்த சோதனையை கேரளம் மாநில முதல்வர் வி.டி. சதீசன் நியாயப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வி.டி. சதீசன் கூறுகையில் "இந்தச் சோதனை, சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் காவல்துறை விசாரணையின் ஒரு பகுதியாகும். இதில் அரசு தலையிடாது. SIT முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. வாரண்ட் உடன் தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளது. இது தொடர்பாக ஜிஎஸ்டி துறை விசாரணை நடத்தியுள்ளது. விசாரணை தொடக்கத்தில் ஜி.எஸ்.டி. மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்றார்.
அதன் ஸ்பான்சர் யார்? RBC-தான் அந்த ஸ்பான்சர். எனவே, அந்த ஆதரவாளர் தொடர்பான ஒரு விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும்போது, அது வேறு எங்கே நடத்தப்பட முடியும்? அது இயல்பான ஒன்றுதானே?. செய்தி வெளியிட்டதற்காக எந்தவொரு ஊடக நிறுவனம் அல்லது பத்திரிகையாளர் மீதும் அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுத்ததில்லை; இனிமேலும் அவ்வாறு செய்யாது" என்றார்.
முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான பினராயி விஜயன், செய்தி நிறுவனத்திற்குள் சென்ற பத்திரிகையாளர்களின் போன்களை பறிமுதல் செய்தது தொடர்பாக விமர்சனம் செய்திருந்திருந்தார். இதுபோன்ற சோதனை கேரளம் மாநிலத்தில் இதுவரை இல்லாதது. முதலமைச்சரின் நேர வற்புறுத்தலின் போரில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று குற்றம்சாட்டியிருந்தார்.
ஆண்டோ அகஸ்டின் டி.வி.யின் நிர்வாக இயக்குநர் இது தொடர்பாக கூறுகையில் "போலீசார் மெஸ்சி நிகழ்ச்சி தொர்பாக எந்த கேள்வியும் கேட்கவில்லை" என்றார்.