கர்நாடகாவில் 5,400 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, விரைவில் மேகதாது அணை கட்டப்படும்: டி.கே.சிவக்குமார்

கர்நாடகா தனது மாநிலத்தில் அணையை கட்டிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Karnataka CM - Sivakumar
Published on: 
Summary

மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியது குறித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

கர்நாடகா தனது மாநிலத்தில் அணையை கட்டிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு 177 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகம் அதிகமாக பயன்பெறும்.

நாங்கள் ஏற்கனவே 5,400 ஏக்கர் நிலப்பரப்பினை அடையாளம் கண்டு, அதனை வனத்துறையிடம் தெரிவித்துள்ளோம்.

இதற்கான ஒப்புதல் நடைமுறையில் உள்ளது; கர்நாடகாவில் அணை கட்டப்படுவதற்கு கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.

நான் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன், ஒரு குழுவை கர்நாடகாவிற்கு அனுப்புங்கள்.

இந்த வாய்ப்பை நாங்கள் தவறாக பயன்படுத்த மாட்டோம், சண்டையிடுவதற்கு இடமில்லை; அந்த நாட்கள் முடிந்துவிட்டன.

நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு தண்ண்ணீரை பகிர்ந்து கொள்வோம், நம்மிடையே ஒற்றுமை தேவை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X