இந்து மாணவர்கள் உதவியுடன் விநாயகர் சிலை செய்து அசத்திய முஸ்லீம் மாணவர்கள்.!

நாக்பூரில் மத நல்லிணகத்திற்கு சான்றாக, சக முஸ்லீம் மாணவர்களுக்கு இந்து மாணவர்கள் விநாயகர் சிலை வடிவமைக்க கற்று கொடுத்தனர்.
நாக்பூரில் மத நல்லிணகத்திற்கு சான்றாக , சக முஸ்லீம் மாணவர்களுக்கு இந்து மாணவர்கள் விநாயகர் சிலை வடிவமைக்க கற்று கொடுத்தனர்.
Published on

மத நல்லிணக்கம்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மண்ணால் செய்யப்பட்ட சிலை வடிவமைக்கும் நிகழ்வில் , இந்து மாணவர்கள் பலர்,முஸ்லீம் மாணவர்களுக்கு சிலை வடிவமைக்க கற்றுகொடுத்த சம்பவம் நெக்ழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறந்த தோழமை

சுற்றுசூழலுக்கு உகந்த முன்னெடுப்பாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்வில், 76 பள்ளிகளை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்து மாணவர்கள் சக மாணவர்களுக்கு விநாயகர் சிலையை வடிவமைக்க கற்று தந்தது சிறந்த தோழமையின் சான்றாக மாறி காண்போரை நெகிழ்சியில் ஆழ்த்தியது

மாணவர்கள் கூறியதாவது...

இந்த பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறும்போது, தாங்கள் மிகுந்த உற்சாகம் அடைந்ததாகவும், சக மாணவர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மேலும் நாங்கள் விநாயகர் சிலை செய்வதில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்து கொண்டோம். ஒன்றாக பணியாற்றியது ஒருவருக்கொருவரை புரிந்துகொள்வதற்க்கு உதவியது என்றும் கூறினர்.

நீர் மாசுபாட்டை தடுப்பதற்கான முன்னெடுப்பு

கணபதி பப்பா மோரியா என்ற முழக்கங்களுடன் தொடங்கிய இந்த நிகழ்வானது குறிப்பாக ஷாது களிமண் (இயற்கை களிமண்) சிலைகளை ஊக்குவிப்பதற்கும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளால்(ஜிப்சம் கனிமத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை வெள்ளை நிறத்தூள்) ஏற்படும் நீர் மாசுபாட்டைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com