என் மலர்
இந்தியா

வீராங்கனை கணவருடன் டேட்டிங்?: முடிவுக்கு வரும் மேரி கோமின் 20 ஆண்டு திருமண வாழ்க்கை..!
- மேரி கோமும், அவரது கணவர் ஓன்லரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.
- இருவரும் விவாகரத்து பெறப் போவதாக வெளியான தகவலால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
புதுடெல்லி:
மணிப்பூரை சேர்ந்த மேரி கோம் மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். ஒலிம்பிக்கில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றவர்.
இந்நிலையில், குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமும், கணவர் ஓன்லரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. இருவரும் விவாகரத்து பெறப் போவதாக வெளியாகியிருக்கும் தகவல் அறிந்து அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மற்றொரு வீராங்கனையின் கணவருடன் மேரி கோம் டேட்டிங் செல்வது காரண்மாகக் கூறப்படுகிறது.
மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் மேரி கோமின் கணவர் ஓன்லர். அதனால் 3 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாம். இதனாலும் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது மேரி கோம் தன் 4 பிள்ளைகளுடன் பரிதாபாத்திலும், அவரது கணவர் ஓன்லர் டெல்லியிலும் தனித்தனியே வசிக்கிறார்கள்.






