என் மலர்

  இந்தியா

  சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்ததாக தகவல்... ஜாமீன் மனு விசாரணைக்கு முன்னதாக அவசர நடவடிக்கை
  X

  சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்ததாக தகவல்... ஜாமீன் மனு விசாரணைக்கு முன்னதாக அவசர நடவடிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜாமீன் மனு மீது நாளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
  • மணீஷ் சிசோடியாவை உள்ளே வைத்திருப்பதுதான் அவர்களின் நோக்கம் என கெஜ்ரிவால் காட்டம்

  புதுடெல்லி:

  டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இதேபோன்று சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

  சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு மீது நாளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

  இந்நிலையில், மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதால் உடனடியாக வெளியே வர முடியாத நிலை உள்ளது.

  இது தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

  மணீஷ் சிசோடியாவை முதலில் சிபிஐ கைது செய்தது. சிபிஐ சோதனையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. பணமும் சிக்கவில்லை. ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது. விசாரணை முடிந்து மணீஷ் நாளை விடுவிக்கப்பட்டிருப்பார். இந்நிலையில் இன்று அமலாக்கத்தறை அவரை கைது செய்தது. ஒவ்வொரு நாளும் புதிய போலி வழக்குகளை உருவாக்குவதன் மூலம் மணீஷ் சிசோடியாவை உள்ளே வைத்திருப்பதுதான் அவர்களின் நோக்கமாக உள்ளது. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பதில் சொல்வார்கள்.

  இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

  ஆம் ஆத்மி கட்சி எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், மதுபான கொள்கையை திரும்பப் பெற்றிருக்காது என்று பாஜக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×