மண்டல, மகர விளக்கு சீசன் - சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணையை இருப்பு வைக்க நடவடிக்கை

சபரிமலை சன்னிதானத்தில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும்.
aravana payasam
Published on
Summary

சீசனுக்கு முன்னதாக சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சபரிமலையில் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதனையொட்டி திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி வி.டி.சதீசன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் அவர் கூறியதாவது:-

சபரிமலை சன்னிதானத்தில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும். சபரிமலையில் பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். பொதுப்பணித்துறை சார்பில் சீசனுக்கு முன்னதாக ரூ.551 கோடியில் சாலை மற்றும் கட்டுமான பணிகள் நிறைவேற்றப்படும்.

பம்பை ஆற்றில் தேங்கி கிடக்கும் துணிகள் உள்பட அனைத்து அசுத்தங்களும் அகற்றப்படும். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 500 பஸ்கள் குத்தகைக்கு எடுத்து இயக்கப்படும்.

சபரிமலையில் அரவணை உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சீசனுக்கு முன்னதாக சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com