டெலிவரி ஊழியரை 5 ஸ்டார் ஓட்டலுக்கு அழைத்து சென்ற நபர்: இணையத்தில் வைரல்

சையது மெஹ்தி என்பவர் சாதாரன வேலை செய்து வரும் ஊழியர்களுக்கு, தன்னால் முடிந்த உதவிகளை வழங்கி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
Swiggy Instamart delivery worker to 5-star hotel
Published on: 
Summary

இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் டெலிவரி ஊழியர் ஒருவரை தனது இருச்சக்கர வாகனத்தில் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்று, உணவு வாங்கி கொடுத்த நிகழ்வு இணையத்தில் வைரலாகியுள்ளது.

சையது மெஹ்தி என்பவர் அன்றாட வேலைகளை செய்து வரும் ஊழியர்களுக்கு, தன்னால் முடிந்த உதவிகளை வழங்கி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

ஸ்விக்கி டெலிவரி ஊழியர்

தேசிய நெடுஞ்சாலையில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் டெலிவரி ஊழியர் ஒருவர் தனது வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் என்னுடன் 5 ஸ்டார் நட்சத்திர ஓட்டலுக்கு வருகிறீர்களா என்று இஸ்டா பிரபலம் கேட்டார்.

இதையடுத்து அந்த ஊழியரும் சம்மதித்ததை அடுத்து, இருவரும் ஒன்றாக பைக்கில் அருகில் இருந்த ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். அங்கு சென்ற டெலிவரி ஊழியரை ஓட்டலின் வாசலில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

நட்சத்திர ஓட்டல்

டெலிவரி சீருடையில் ஊழியர் இருந்த காரணத்தால், அவரை உள்ளே அனுமதிப்பதற்கு காவலர்கள் மறுத்தனர்.

இதையடுத்து டெலிவரி ஊழியர் தன்னுடைய மாமா தான் என்று பாதுகாவலர்களிடம் இன்ஸ்டா பிரபலம் கூறினார். பின்னர் அவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளே சென்று ஒரு இருக்கையில் அமர்ந்தனர்.

முதல் அனுபவம்

இதையடுத்து மில்க்‌ஷேக் பானத்தை ஆர்டர் செய்து, அதை டெலிவரி ஊழியரிடம் இன்ஸ்டா பிரபலம் கொடுத்தார்.

மில்க்‌ஷேக்கை குடித்த டெலிவரி ஊழியரிடம், இதற்கு முன்னால் நட்சத்திர ஓட்டலுக்கு வந்துள்ளீர்களா? என்று இன்ஸ்டா பிரபலம் கேட்டார்.

அதற்கு அந்த ஊழியர், இதற்கு முன் தான் வந்தது இல்லை; இதுதான் தனக்கு முதல்முறை என்று ஊழியர் கூறினார்.

பின்னர் மில்க்‌ஷேக் நன்றாக இருந்ததா? என்றும் இன்ஸ்டா பிரபலம கேட்டார்.

அதற்கு டெலிவரி ஊழியர், மிகவும் நன்றாக இருந்தது; நன்றி என்று கூறினார்.

இணையத்தில் வைரல்

இதையடுத்து இருவரும் நட்சத்திர ஓட்டலுக்கு வெளியே வந்து, பிரிந்து சென்றனர்.

இந்த நிகழ்வை முழுவதுமாக வீடியோ பதிவு செய்து, அதனை சமூக வலைதளத்தில் இன்ஸ்டா பிரபலம் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து இன்ஸ்டா பிரபலம் பகிர்ந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி, பயனர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com