தொலைந்து போன செருப்பை கண்டுபிடிக்க ChatGPT பயன்படுத்திய நபர்- வைரலாகும் வீடியோ

உஜ்ஜைன் கோவில் வளாகத்தில் தொலைந்து போன செருப்பை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்தியுள்ளார்.
Clogs
காலணி
Published on

ராஜஸ்தானில் உள்ள உஜ்ஜைனில் இருக்கும் கோவில் மிகவும் பிரசித்து பெற்றது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த கோவிலுக்கு ஒருவர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அவர் கோவிலுக்கு வெளியே தனது காலணியை விட்டுச் சென்றுள்ளார்.

கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, வெளியே வந்துள்ளார். அப்போது, வெளிப்பக்கத்தில் ஆயிரக்கணக்கான காலணிகள் மற்றும் ஷூக்கள் கிடந்துள்ளன. இதில் தனது Clogs வகை செருப்பை அவரால் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் அந்த நபர் ஏ.ஐ. ஆன ChatGPT-யை பயன்படுத்தினார். இந்த செருப்பு குவியலில் இருந்து தனது செருப்பை கண்டுபிடிக்க டிப்ஸ் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ChatGPT-யும் வழிகாட்டுதல் வழங்க தனது செருப்பை கண்டுபிடித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிகவும் சாதாரணமான ஒரு சூழலில் செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு உதவியது என்பதைக் கண்டு பலர் ரசித்த நிலையில், ஏ.ஐ. எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com