

பீகாரை சேர்ந்த நபர் ஒருவர், தான் புதிதாக வாங்கிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை, இரவு நேரத்தில் திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக வீட்டின் மொட்டை மாடிக்கு, கிரேன் மூலம் கொண்டு சென்று பார்க்கிங் செய்த காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவர் சமீபத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை வாங்கி உள்ளார்.
இதையடுத்து இவருக்கு இஸ்ரேல் நாட்டில் வேலை கிடைத்து விட்டதால், தனது வாகனத்தை பீகாரில் ஒரு ஓட்டுநரிடம் கொடுத்துவிட்டு, அவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.
இதற்கிடையில் சிறிது காலம் கழித்து, அந்த ஓட்டுநர் பணியில் இருந்து சென்று விட்ட நிலையில், தனது கார் திருடப்பட்டு விடுமோ என்று யாதவுக்கு கவலை எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து திருட்டில் இருந்து காரை பாதுகாப்பதற்காக, யாதவ் குடும்பத்தினர் மஹிந்திரா வாகனத்தை வீட்டின் மொட்டை மாடிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
பின்னர் அவர்கள், அந்த வாகனத்தை ஒரு கிரேன் மூலம் வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள மாடிக்கு தூக்கி சென்று பார்க்கிங் செய்தனர்.
இந்த காட்சியை பார்த்த உள்ளூர் கிராம மக்கள், அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர்.
கார் திருடப்படுவதில் இருந்து பாதுகாப்பதற்காக, கார் உரிமையாளர் வீட்டின் மொட்டை பார்க்கிங் செய்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.