காபி- பால் சேர்த்து மேகி தயாரித்த வியாபாரி

தக்காளி, கேரட், வெங்காயம், மேகி மசாலா, காபி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து புது வகையில் நூடுல்ஸ் தயாரிக்கும் காட்சிகள் உள்ளன. சில பயனர்கள் இந்த உணவு தயாரிப்பை விஷம் என விமர்சித்துள்ளனர்.
காபி- பால் சேர்த்து மேகி தயாரித்த வியாபாரி
Published on

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பிடித்த சிற்றுண்டியாக நூடுல்ஸ் மாறி வருகிறது. தெருவோரங்களில் பல்வேறு வகைகளில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் வகைகள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிரப்படுவதுண்டு.

அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் தெருவோர வியாபாரி ஒருவர், காபி மற்றும் பாலுடன் மேகி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. அதில் அந்த வியாபாரி ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து அதில் மேகி நூடுல்ஸ் சேர்க்கிறார். தொடர்ந்து தக்காளி, கேரட், வெங்காயம், மேகி மசாலா, காபி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து புது வகையில் நூடுல்ஸ் தயாரிக்கும் காட்சிகள் உள்ளன.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் இந்த உணவு தயாரிப்பை விஷம் என விமர்சித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com