டிக்கெட்டில் 54, ரெயிலில் இருந்ததோ 52 சீட்: பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

முன்பதிவு செய்து சீட் உறுதி செய்யப்பட்ட பின்னரும், அவதிப்பட்டதாக பயணி தெரிவித்துள்ளார்.
ரெயில் டிக்கேட்
ரெயில் டிக்கேட்
Published on: 

ரெயில் பெட்டியில் மொத்தம் 52 படுக்கைகள் மட்டுமே இருந்த நிலையில், 54-வது பெர்த் ஒதுக்கப்பட்டு பயணச்சீட்டு வழங்கப்பட்ட சம்பவம் பயணி ஒருவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விசித்திரமான சம்பவம் தொடர்பான பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

டிக்கெட்டில் உள்ள எண் இருக்கையை தேடிய பயணி

ரெயிலில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்த பயணி ஒருவருக்கு 54-வது பெர்த் (சீட்) ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ரெயிலில் ஏறிய அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பெர்த்தை தேடியுள்ளார். ஆனால், அந்தப் பெட்டியில் 52 பெர்த் சீட் மட்டுமே இருந்துள்ளன.

இதனால் தனது பெர்த் எங்கே இருக்கிறது என தெரியாமல் அவர் குழப்பமடைந்தார். டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருந்த பெர்த் எண்ணுக்கும் ரெயில் பெட்டியில் இருந்த உண்மையான பெர்த் எண்ணிக்கைக்கும் இடையே முரண்பாடு இருப்பது தெரியவந்தது.

ரெயில்வேயிடம் புகார்

இதனைத் தொடர்ந்து அவர் ரெயில்வே உதவி எண்ணிற்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ரெயில்வே சார்பில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுப்பதற்காக புகார் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் இணையத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகத்தின் முன்பதிவு நடைமுறை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இஷான் பஜ்பாய் என்பவர் வாரணாசி சிட்டியில் இருந்து கோரக்பூருக்க செல்ல டிக்கெட் எடுத்துள்ளார். அவருக்கு 54 பெர்த் எண் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரெயில் புறப்படுவதற்கு சற்று முன் ரெயிலில் ஏறியுள்ளார். தன்னுடைய 54-வது பெர்த்தை தேடி சென்றுள்ளார். அப்படி ஒரு நம்பர் அந்த பெட்டியில் இல்லை. பின்னர் பார்க்கும்போதுதான் அந்த பெட்டியில் மொத்தமே 52 பெர்த் சீட்டுதான் இருந்துள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்து பெர்த் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் பயணம் செய்துள்ளார்.

தங்களுக்கு இதுபோன்று நடந்துள்ளதாகவும், ஒரு கோச்சிற்குப் பதிலாக மற்றொரு கோச், அதாவது 2 AC-க்கு முன்பதிவு செய்திருந்த நிலையில் தானாக 3 AC-க்கு மாறியதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

X