மேடையில் ராமர் வேடத்தில் நடிக்கும்போதே மாரடைப்பு.. நெஞ்சைப் பிடித்தவாறு உயிரைவிட்ட நபர் - வீடியோ

ராம்லீலா நாடக நிகழ்ச்சியில் சுசில் கௌசிக் என்ற 45 வயது நபர் உயிரோட்டத்தோடு நடித்துக்கொண்டிருந்தார்.மேடையில் முட்டிபோட்டு அமர்ந்த அவர் கைகளை விரித்தவாறு இருந்தார்.
மேடையில் ராமர் வேடத்தில் நடிக்கும்போதே மாரடைப்பு.. நெஞ்சைப் பிடித்தவாறு உயிரைவிட்ட நபர் - வீடியோ
Published on

நவராத்திரி விழாவை முன்னிட்டு டெல்லியில் நடந்த ராம்லீலா நாடக நிகழ்ச்சியில் ராமர் வேடத்தில் நடித்தவர் மேடையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியில் விஸ்வகர்மா நகரில் ஷாதரா [Shahdara] பகுதியில் நடந்த ராம்லீலா நாடக நிகழ்ச்சியில் சுசில் கௌசிக் என்ற 45 வயது நபர் உயிரோட்டத்தோடு நடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது மேடையில் முட்டிபோட்டு அமர்ந்த அவர் கைகளை விரித்தவாறு இருந்தார். பின்னர் எழுந்து மேடையில் இரண்டு அடி முன்னே நகர்ந்த அவர் திடீரென மார்பை கையால் பிடித்துக்கொண்டு மேடைக்கு பின்புறம் சென்ற நிலையில் சுயநினைவை இழந்தார் சரிந்து விழுந்தார்.

உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ராம்லீலா என்பது புராண கதையான ராமாயணத்தை மையப்படுத்தி அரங்கேற்றமாகும் மேடை நாடகமாகும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com