

பெங்களூருவில் பெண்ணிடம் கத்தி முனையை காட்டி தங்க நகை பறிக்க நபரி ஒருவர் முயன்றுள்ளார். இந்திராநகரில் ஒரு காலணி மற்றும் பை பழுதுபார்க்கும் கடையில், பொது இடத்தில் ஒரு பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி, சுமார் ₹ 4.5 லட்சம் மதிப்புள்ள தங்கத் தாலியைக் கொள்ளையடிக்க முயன்றதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு டோம்லூர் 100 அடி சாலையில் உள்ள காலணி மற்றும் பை பழுதுபார்க்கும் கடைக்கு பிரபுராஜ் என்ற அடையாளம் தெரியாத நபர் ஹெல்மெட் அணிந்து வந்துள்ளார். யாரோ தன்னை கொலை செய்ய துரத்துவதாகக் கூறி, கடையில் இருந்த பெண் ஊழியரிடம் தஞ்சமடைவது போல் நடித்துள்ளார்.
கடை உரிமையாளருக்குத் தகவல் தெரிவிக்கும் முன், பிரபுராஜ் திடீரென கத்தியை எடுத்து ஜெயஸ்ரீயின் கழுத்தில் வைத்துள்ளார். அவர் கூச்சலிடாமல் இருக்க, மேஜை மீது ஃபெவிக்விக் பசையை ஊற்றி ஜெயஸ்ரீயின் இரு கைகளையும் வலுக்கட்டாயமாக ஒட்டியுள்ளார்.
பின்னர் ஜெயஸ்ரீ அணிந்திருந்த சுமார் 4.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 கிராம் தங்கத் தாலி செயினைப் பறிக்க முயன்றுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் சங்கிலியை பறிக்க முயன்ற போது அவர் உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார்.அவரது அலறல் சத்தத்தை கேட்டு பக்கத்து கடைக்காரர்கள் வந்துள்ளனர்.தன்னைச் சுற்றி அனைவரும் சூழ்ந்திருப்பதை உணர்ந்த பிரபுராஜ், கத்தியை அப்பெண்ணின் கழுத்தில் வைத்து, அருகில் யாராவது வந்தால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.
கூட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக அப்பெண்ணைக் கேடயமாகப் பயன்படுத்த அவர் முயன்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், உள்ளூர்வாசிகள் அவனது கவனத்தைத் திசைதிருப்பி, அவனைப் பிடித்து, அந்தப் பெண்ணை மீட்டு, இந்திராநகர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் அப்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் பெரிய காயங்கள் இன்றித் தப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பெங்களூரு இந்திராநகரில், கத்தி முனையில் பெண்ணை மிரட்டி, கைகளில் 'ஃபெவிக்விக்' பசையை ஊற்றி மேஜையோடு ஒட்டி வைத்து தாலி செயினைப் பறிக்க முயன்ற பிரபுராஜ் என்ற வாலிபர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசார் இந்திராநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து பிரபுராஜைக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.இந்த நிலையில் காவல் துறை சங்கிலியை பறிக்க முயன்றத்றகான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவத்தின்போது குற்றம் சாட்டப்பட்டவர் அப்பெண்ணை மிரட்டி இழுத்துச் செல்வதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி, கடைகளில் பணிபுரியும் மக்களின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.