

பிரேசில் அதிபர் தேர்தலில் இடதுசாரித் தலைவரான லூலா டா சில்வா மீண்டும் வெற்றி பெற்று, நான்காவது முறையாக அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார்.
லூலா டா சில்வா 51.79% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட வலதுசாரி வேட்பாளரும், முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சோனாரோவின் மகனுமான ஃபிளாவியோ போல்சோனாரோ 48.21% வாக்குகள் பெற்றார்
அக்டோபர் 4-ல் நடந்த முதல் சுற்றுத் தேர்தலில் லுலா பின்தங்கியிருந்த நிலையில், இரண்டாம் சுற்றுத் தேர்தலில் போராடி வியத்தகு வெற்றி பெற்றுள்ளார். பிரேசில் ஜனநாயக வரலாற்றில் முதல் சுற்றில் தோற்றுவிட்டு இரண்டாம் சுற்றில் வென்ற முதல் தலைவர் இவர்தான்.
இந்த நிலையில் பிரேசில் அதிபர் தேர்தலில் மீண்டும் வரலாற்று வெற்றி பெற்றுள்ள இடதுசாரித் தலைவர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு கேரள முன்னாள் முதல்வர் பினராய் விஜயன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
லூலாவின் இந்த வெற்றி, இடதுசாரி சொந்த எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழிலாள வர்க்கத்திற்கு இருக்கும் வலிமையையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது
பிரேசில் முதல் இந்தியா வரை, தீவிர வலதுசாரி அரசியலை எதிர்கொள்ள வேண்டுமானால், தொழிலாளர் உரிமைகள், சமூக நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முறையான மாற்று அவசியம் என்பது தெளிவாகிறது.
லுலா டா சில்வாவின் இந்த வெற்றி, சங் பரிவாரத்தின் பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிரான போராட்டத்திலும், மேலும் நீதியான மற்றும் ஜனநாயகமான இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சியிலும் புதிய நம்பிக்கையை அளிக்கிறது.
என்று தெரிவித்துள்ளார்