கேரளத்தில் மைனர் சிறுமியை கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை

வழக்கு பொன்னானி சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை நீதிபதி சுபிதா சிரக்கல் விசாரித்தார்.
ஆயுள் தண்டனை
Published on: 
Summary

கேரளத்தில் தனது மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நீதிபதி தீர்ப்பின் படி, அபராதம் செலுத்தாவிட்டால் கூடுதலாக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொன்னானி அருகே உள்ள சங்கரம்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர், மைனர் சிறுமியான தனது மகளை கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர் மகள் என்றும் பாராமல் சிறுமியை 3 மாதமாக பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

வழக்கு விசாரணை

இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இது தொடர்பாக சங்கரம்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனேஷ் வழக்குப்பதிந்து சிறுமியின் தந்தையை கைது செய்தார். இந்த வழக்கு பொன்னானி சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை நீதிபதி சுபிதா சிரக்கல் விசாரித்தார்.

வழக்கின் விசாரணை முடிந்தநிலையில் தற்போதைய நீதிபதி லிஷா தீர்ப்பு வழங்கினார். அவர் குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை செலுத்தாவிட்டால் கூடுதலாக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவர் தீர்ப்பளித்தார்.

X