

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது . தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா மற்று வாக்குதிருட்டு குற்றச்சாட்டுக்ள,தேர்தல் முறைக்கேடுவிற்கு எதிராக இந்த பேரணியானது நடைப்பெற இருக்கிறது
இந்த நிலையில் நாளை நடைப்பெறும் பேரணி குறித்த் அழைப்பை ராகுல் காந்தி விடுத்துள்ளார்.இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
மதியம் 12 மணிக்கு நாளை சந்திப்போம், ஒன்றாக நடப்போம்.கன்னாட் பிளேஸ் மின்டோ சாலை சந்திப்பு - அஜ்மேரி கேட் -ராம்லீலா மைதானம் என பேரணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடத்தை பகிர்ந்து அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞனேஷ் குமார் பதவி விலகக்கோரி டெல்லி ராம்லீலா மைதானத்தில் வருகிற 1-ந்தேதி (ஞாயிறு) இந்தியா கூட்டணி சார்பில் மிகப்பெரிய பேரணி நடைபெற இருக்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி தலைமை தாங்குகிறது. குறைந்தது 10 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி சார்பாக நடைப்பெறும் இந்த் போராட்டத்திற்கு சிஜேபி மற்றும் இதர மாணவ அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளனர்.
குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் போராட்டத்திற்கு முன்பு, பின்பு மைதானத்தில் போராட்டக்காரர்கள் தங்க அனுமதி இல்லை. ராம்லீலா மைதானத்தைத் தாண்டி வேறு இடங்களை நோக்கி பேரணி செல்லக்கூடாது மேலும் போராட்டத்தை நீடிக்காமல் மாலை 5 மணிக்குள் முடித்து விட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை டெல்லி காவல்துறை விடுத்துள்ளது.