கெஜ்ரிவாலிடம் ரூ.7 கோடி கேட்டு பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்

திலக் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜர்னைல் சிங் கொலை மிரட்டல் குறித்து டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
Arvind Kejriwal
Published on: 
Summary

டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை ஜூஹூ பகுதியில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் கடந்த அக்டோபர் மாதம் பயிற்சியை முடித்து கொண்டு வெளியே வந்த நடிகர் வித்யூத் ஜமால் மீது, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த மூன்று பேர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் சிறு காயங்களுடன் வித்யூத் ஜமால் உயிர் தப்பினார்.

இதையடுத்து தற்போது டெல்லி முன்னாள் முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்யப்போவதாக பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

காவல் நிலையத்தில் புகார்

இந்த கொலை மிரட்டல் குறித்து திலக் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜர்னைல் சிங் டெல்லி காவல்துறையிடம் அளித்த புகாரில்,

“லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர் என்று கூறிக்கொண்ட ஒருவர், ரூபாய் 7 கோடி பணயத்தொகையை கொடுக்காவிட்டால், கெஜ்ரிவாலையும் அவரது மகளையும் கொன்றுவிடுவதாக தொலைபேசியில் மிரட்டினார்.

மேலும் என்னை அழைத்தவரிடம் இருந்து, மிரட்டல் அழைப்புகளும், வாட்ஸ்அப் செய்திகளும் வந்துள்ளன” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் ஜர்னைல் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், மொஹாலி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

X