கும்மிடிப்பூண்டி - கூடூர் இடையே புதிய ரெயில் வழித்தடம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ரூ.2,229 கோடியில் புதிய வழித்தடங்கள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
Union Ministry Aswini Vaishnaw
Published on

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் 410 கி.மீ தூரத்திற்கு புதிய ரெயில் பாதைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, ஹவுரா- சென்னை பல்வழித்தட திட்டத்தின்கீழ் கும்மிடிப்பூண்டி முதல் கூடூர் வரை மூன்றாவது மற்றும் 4வது ரெயில்வே வழித்தடங்கள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கும்மிடிப்பூண்டி- கூடூர் தடத்தில் ரெயில் பாதை அமைப்பதன் மூலம் தென் மாநிலங்கள், வட மாநிலங்களுக்கு இடையே பயணம் விரைவாகும்.

ரூ.2,229 கோடியில் புதிய வழித்தடங்கள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ரூ.13,041 கோடி மதிப்பில் 5 ரெயில்வே வழித்தட பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com