VIDEO- மோகன்லால், விஜய்யை விட சிறப்பாக நடனமாடுகிறேன்: வைரல் AI வீடியோ குறித்து கேரள முதல்வர் வி.டி.சதீசன் நகைச்சுவை பதில்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது இசை, நடனம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
 Kerala CM V.D.Satheesan
Published on
Summary

கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து குழு நடனம் ஆடுவது போன்று தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று பெரிய அளவில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் ‘அலா போலே’ பாடலுக்கு, நடிகை ஷம்னா காசிம் மற்றும் குழுவினரின் நடன அசைவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து குழு நடனம் ஆடுவது போன்று தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டுக்கு எதிரான நகைச்சுவை போராட்டம்

கேரளாவில் நிலவும் கடும் வெயில் மற்றும் மழைப்பொழிவு குறைவு காரணமாக மின் நுகர்வு அதிகரித்துள்ளதால், இரவு நேரங்களில் மின் விநியோகக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொதுமக்களின் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்த மின்சார வாரியத்தையும் முதலமைச்சரையும் மையப்படுத்தி இந்த ஏஐ வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் பின்னணியில் உள்ள சட்ட அம்சங்கள் மற்றும் பதிப்புரிமை குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் வி.டி.சதீசன் இது குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்யுடன் ஒப்பீடு

இந்த வைரல் வீடியோ குறித்து முதலமைச்சர் வி.டி.சதீசன் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது இசை, நடனம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். இன்று சமூக வலைதளங்களில் ஒரு சுவாரஸ்யமான வீடியோவைக் கண்டதாகவும், அதில் தாம் ஒரு குழு நடனத்திற்குத் தலைமை தாங்குவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், நடிகர் மோகன்லாலை விடவும், தமது நண்பரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்யை விடவும் தாம் சிறப்பாக நடனமாடுவதாக அந்த வீடியோவில் உருவாக்கப்பட்டுள்ளதை கண்டு தாம் வியப்படைந்ததாக நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

தொழில்நுட்ப வளர்ச்சி

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், எதிர்காலத்தில் இத்தகைய தொழில்நுட்ப உருவாக்கங்களைச் சட்டப்பூர்வமாக எப்படி வரையறை செய்வது என்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும் என்றார். தொழில்நுட்பத்தின் தலையீடு அதிகரித்து வருவதால், தற்போதைய சட்டக் கட்டமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும், பதிப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை மற்றும் பைரசி தொடர்பான சட்டங்கள் காலப்போக்கில் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com