

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பது, அந்நிய செலாவணியை மிச்சப்படுத்துவது, விவசாயிகளை ஊக்குவிப்பது மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைப்பது ஆகியவையே மத்திய அரசின் முக்கிய நோக்கங்களாகும். இதற்கான E20 பெட்ரோலை அறிமுகப்படுத்தியது. இதில் 80 சதவீதம் பெட்ரோல், 20 சதவீதம் எத்தனால் கலந்திருக்கும்.
20 சதவீதம் எத்தனால் கலந்திருப்பதால், மைலேஜ் கிடைப்பதில் சிரமம் என்ற விமர்சனம் எழுந்து வருகிறது. ஆனால், இதை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு, 2023 ஏப்ரலுக்கு பின்னர் தயாரிக்கப்படும் அனைத்து வாகனங்களும் E20 பெட்ரோலுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு திடீரென E20 பெட்ரோலில் எவ்வளவு எத்தனால் கலந்து இருக்கிறது என்பதை பரிசோதனை செய்ய, பல்வேறு பெட்ரோல் பல்கில் E20 பெட்ரோலை எடுத்து பரிசோதிக்க கேட்டுக் கொண்டது.
ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளது. இதனால் தனியார் பரிசோதனைக்கு நிலையத்திற்கு மாதிரியை அனுப்பி வைத்தது. அதில் கர்நாடக அரசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
IOCL நிறுவனத்தின் பெட்ரோலில் எத்தனால் அளவு 31.2 சதவீதமாக இருந்ததுள்ளது. HPCL நிறுவனத்தின் பெட்ரோலில் 30.5 சதவீதம் இருந்துள்ளது. BPCL நிறுவனத்தின் பெட்ரோலில் 26.5 சதவீதம் இருந்துள்ளது. ஷெல் நிறுவனத்தின் பெட்ரோலில் 25.5 சதவீதம் இருந்துள்ளது.
இதனால் நுகர்வோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.