SIR-க்குப் பிறகு 27-ந்தேதி இறுதி வாக்காளர்கள் பட்டியல்: கர்நாடகாவில் புயலை கிளப்புமா?

கர்நாடக மாநிலத்தில் முரண்டுபாடு, மேப்பிங் இல்லாத என 43.82 லட்சம் பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
SIR
SIR
Published on: 

கர்நாடகாவில் 43.82 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் வருகிற 27-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் (SIR) பணியை மேற்கொண்டது. முதன் முதலாவதாக பீகார் மாநிலத்தில் SIR பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கொண்டு வரப்பட்டது.

SIR மூலம் 13 கோடி வாக்காளர்களை நீக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. உயிரோடு இருப்பவர்கள் பெயர் நீக்கப்பட்டதாக குற்றம்சாட்டினர். பாஜக-வுக்கு ஆதரவாக தலைமை தேர்தல் ஆணையம் ஞானேஷ் குமார் செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.

சமீபத்தில் SIR-க்கான Form 6-ல் கொண்டு வந்த திருத்தம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருக்கும் மற்ற இரண்டு ஆணையர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக தகவல் வெளியானது. இதனால் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் SIR

இதற்கிடையே பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் SIR பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதற்கான பணியை மேற்கொண்டு வந்தது.

இந்த பணியின் போது மேப்பிங் ஆகாதவை மற்றும் முரண்பாடுகள் கொண்டவை என 43 லட்சத்து 82 ஆயிரத்து 824 பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் கேட்டு விளக்கம் அளிக்க கோரியிருந்தது. நேற்று வரை நோட்டீஸ் அனுப்பியவர்களிடன் இருந்து விளக்கம் பெறப்பட்டுள்ளது.

25.87 லட்சம் பேர் விளக்கம்

அதன்படி 10 லட்சத்து 42 ஆயிரத்து 863 பேரிடம் இருந்து படிவம் 6 பெறப்பட்டுள்ளது. 4840 பேரிடம் இருந்து படிவம் 6ஏ பெறபப்ட்டுள்ளது. 2 லட்சத்து 28 ஆயிரத்து 917 பேரிடம் இருந்து படிவம் 7 பெறப்பட்டுள்ளது. 13 லட்சத்து 10 ஆயிரத்து 841 பேரிடம் படிவம் 8 பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 25,87,461 பேரிடம் இருந்து விளக்கம் பெறப்பட்டுள்ளது. 18 லட்சம் பேர் விளக்கம் அளிக்கவில்லை.

இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அப்போதுதான் எவ்வளவு வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. சேர்க்கப்பட்டுள்ளது என்பது தெரியவரும்.

ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தில் SIR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியிடப்பட உள்ளது. இதில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா? என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறதா எனப் பார்க்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பெயர்களை நீக்கக் கோரவோ படிவம் 7 (Form 7) பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், வசிப்பிட மாற்றம் அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களில் திருத்தம் செய்ய படிவம் 8 (Form 8) பயன்படுத்தப்படுகிறது.

செப்டம்பர் 23-ம் தேதி வரை பெறப்பட்ட அனைத்து படிவம் 7 விண்ணப்பங்களும் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதும், விவரங்களைத் திருத்துவதும் தொடர்ந்து நடைபெறும் நடைமுறைகளாகும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com