மார்க்கெட்டில் உலாவும் செயற்கை பனீர்: கர்நாடக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

தாவர எண்ணெய், தாவர கொழுப்பு, மாவுச்சத்து, எமல்சிபையர்கள் மற்றும் பிற பால் அல்லாத பொருட்கள் பயன்படுத்தப்படலாம்.
செயற்கை பனீர்
செயற்கை பனீர்
Published on
Summary

புரோட்டீன் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பனீரை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பயன்படுத்தில் பால் அல்லாத தாவர எண்ணெய் போன்ற பொருட்களில் இருந்த போலியாக செயற்கை பனீர் சந்தைகளில் உலாவருகின்றன. இது பொதுமக்களில் சுகாதாரத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மகாராஷ்டிரா அரசு அனலாக பனீர் என அழைக்கப்படும் செயற்கை பனீருக்கு தடைவிதித்திருந்தது. அந்த வகைியல் தற்போது கர்நாடக அரசு ஒரு வருடம் தடைவிதித்துள்ளது.

கர்நாடக அரசு உண்மையான பனீருக்கு மாற்றாக தயாரிக்கப்பட்டு பனீர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் அனலாக் பனீர் அல்லது Non-Dairy Paneer தயாரிப்பு சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனைக்கு மாநிலம் முழுவதும் ஓராண்டு தடை விதித்துள்ளது. பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிட்ட அரசு அறிவிப்பில் இந்தத் தடை குறிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தி, பதப்படுத்துதல், பேக்கிங், சேமிப்பு, போக்குவரத்து, மொத்த மற்றும் சில்லறை விற்பனை, விற்பனைக்காகக் காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை பொருந்தும்.

போலி பனீர்

பாலில் இருந்து தயாரிக்கப்படும் உண்மையான பனீரில் பால் கொழுப்பு மற்றும் பால் திடப்பொருட்கள் முக்கியமானவை. ஆனால், அனலாக் பனீரில் பால் கொழுப்புக்கு பதிலாக தாவர எண்ணெய், தாவர கொழுப்பு, மாவுச்சத்து, எமல்சிபையர்கள் மற்றும் பிற பால் அல்லாத பொருட்கள் பயன்படுத்தப்படலாம்.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின்படி, இத்தகைய தயாரிப்புகளை ‘பனீர்’ என்ற பெயரில் லேபிள் செய்வது (பொருட்கள் மீது விவரம் அடங்கிய அட்டை அல்லது அச்சிடுதல்), விளம்பரப்படுத்துவது அல்லது விற்பனை செய்வது அனுமதிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், FSSAI தனித்தனி தரநிலைகளை ஏற்கனவே நிர்ணயித்துள்ள Frozen Dessert, Processed Cheese, Mixed Fat Spread போன்ற தயாரிப்புகளுக்கு இந்தத் தடை பொருந்தாது.

மேலும், உணவுத் தயாரிப்புகளில் அனலாக் பனீரை மூலப்பொருளாகப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறாமல் உணவு நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com