உறவினர் திருமணம்... புதிய வீட்டை பரிசாக வழங்கிய கங்கனா ரணாவத்

கங்கனா தனது உறவினர் வருண் ரணாவத்தின் திருமணத்தில் கலந்து கொண்டார். நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா வருணுக்கு சண்டிகரில் ஒரு வீட்டை பரிசளித்துள்ளார்.
உறவினர் திருமணம்... புதிய வீட்டை பரிசாக வழங்கிய கங்கனா ரணாவத்
Published on

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு கங்கனா ரணாவத் வெற்றி பெற்றார்.

பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக மாண்டி தொகுதியில் பதவியேற்ற கங்கனா தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்காகவும் நேரத்தை ஒதுக்கி வருகிறார்.

அந்தவகையில் கங்கனா தனது உறவினர் வருண் ரணாவத்தின் திருமணத்தில் கலந்து கொண்டார். அப்போது நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா வருணுக்கு சண்டிகரில் ஒரு வீட்டை பரிசளித்துள்ளார்.

இதையடுத்து வருண் தனது இன்ஸ்டாகிராமில், "நன்றி தீதி கங்கனா ரணாவத். இப்போது சண்டிகரில் வீடு உள்ளது," என்று படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

வருணின் மனைவி அஞ்சலி ரணாவத் தனது இன்ஸ்டாகிராமில் புதிய வீட்டின் கிரக பிரவேச புகைப்படங்களை பதிவிட்டு, கங்கனாவை "அன்பு, அடக்கம் மற்றும் தைரியம்" என்றும் பாராட்டியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com