நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அபிஜீத் தீப்கே, செளரவ் தாஸ் - விடுதலை செய்து நீதிபதி உத்தரவு

சிஜேபி கட்சி நேற்று 'டெல்லி சலோ' என்ற பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அபிஜீத் தீப்கே, செளரவ் தாஸ் - விடுதலை செய்து நீதிபதி உத்தரவு
Published on: 
Summary

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஜேபி கட்சியை சேர்ந்த அபிஜீத் தீப்கே, அசுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு மெஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி ஜந்தரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கைக்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரியும் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

டெல்லி சலோ

இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வலியுறுத்தி சிஜேபி கட்சி நேற்று 'டெல்லி சலோ' என்ற பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதையடுத்து சிஜேபி அறிவித்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக அரசியல் கட்சி தலைவர்களும், இளைஞர்களும் டெல்லி நோக்கி படையெடுத்தனர்.

தடை உத்தரவு

சிஜேபி அறிவிப்பை தொடர்ந்து, தேசிய தலைநகர் டெல்லியில் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் அமலில் உள்ளதாகவும், அனுமதியற்ற கூட்டங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்தது.

இதையடுத்து டெல்லிக்கு செல்லும் மெட்ரோ ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 40,000 அதிகமான அளவில் டெல்லி காவல்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுத காவல் படையினர் குவிக்கப்பட்டனர்.

போராட்டக்காரர்கள் கைது

இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்ற 2,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

டெல்லி ஜந்தரில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் வந்த சிஜேபி கட்சியை சேர்ந்த அபிஜீத் தீப்கே, செளரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம் தொடரும்

சிஜேபி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து, கட்சி உறுப்பினரான அஜிங்க்யா ஷிண்டே போராட்டத்தை தொடர்ந்து வழிநடத்துவார் என அபிஜீத் தீப்கே கூறினார்.

மேலும் அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டாலும், ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என சிஜேபி தெரிவித்தது.

நிபந்தனையுடன் விடுவிப்பு

இந்த நிலையில் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சிஜேபி கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகள், ஓராண்டு காலத்திற்கு நாட்டில் அமைதியை காக்கும்படி நிபந்தனையுடன் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com