தள்ளிய விட்டதாக ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த செய்தியாளர்

தள்ளிய விட்டதாக ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த செய்தியாளர்
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on: 

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் மேற்கொண்ட தீவிர சிறப்பு திருத்தம் பணியில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த திங்கட்கிழமை தலைமை நீதிபதியை சந்தித்து புகார் அளிக்க ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியினர் பேரணியாக சென்றனர்.

அப்போது, பெண் செய்தியாளர் ஒருவரை ராகுல் காந்தி தள்ளி விட்டதாக செய்தி வெளியானது. ரிச்சா பராசார் என்ற செய்தியாளர், தான் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், தனக்குதான் இது நடந்ததாகவும் தெரிவித்தார். இதற்கான அவர் மருத்துவமனையில் சிகிச்சையும் மேற்கொண்டார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ரிச்சா கூறியதாவது:-

நான் உச்சநீதிமன்ற வளாகத்திற்குள், ஒரு நுழைவாயிலுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். ராகுல் காந்தி வெளியே வரும்போது அவரிடமிருந்து ஒரு கருத்து (soundbite) பெறலாம் என்று காத்திருந்தேன். என்ன நடக்கிறது என்பதை நான் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முன்பே, ராகுல் காந்தி மிகவும் அதிருப்தியான முகபாவனையுடன் முன்னேறி வந்தார்.

திடீரென்று, அவர் என் கையைப் பிடித்து பலமாக இழுத்தார். அவர் என்னை மிகவும் கடுமையாக இழுத்த நிலையில், அடுத்த சில நொடிகளிலேயே எல்லாம் மிக வேகமாக நடந்து முடிந்தது. அவருடைய மெய்க்காவலர்கள் என்னை தள்ளிவிட்டனர். இதனால் நான் உச்ச நீதிமன்றப் படிகளில் முகங்கவிழ்ந்து விழுந்தேன்.

இவ்வாறு ரிச்சா தெரிவித்துள்ளார்.

புகார் மனுவில் கூறியிருப்பது என்ன?

மேலும் தான் மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், மிரட்டியதாகவும், தள்ளிவிட்டதாகவும் அல்லது வன்முறையைப் பயன்படுத்தியதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com