ரூ.45 ஆயிரம் மின்கட்டணம் செலுத்தியவரின் நகைச்சுவை பதிவு

எக்ஸ் வலைதள பக்கத்தில் மின்கட்டணம் செலுத்தியது தொடர்பாக பதிவிட்டுள்ளார். மெழுகுவர்த்திகளுக்கு மாறி விடலாம் என்று நினைக்கிறேன்.
ரூ.45 ஆயிரம் மின்கட்டணம் செலுத்தியவரின் நகைச்சுவை பதிவு
Published on

அரியானா மாநிலத்தின் குருகுராம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்வீர்சிங். இவர் செயலி ஒன்றில் இணை நிறுவனராக பணியாற்றி வருகிறார். இவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மின்கட்டணம் செலுத்தியது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

அதில், கடந்த 2 மாதங்களில் மொத்தமாக ரூ.45 ஆயிரத்து 491 ரூபாய் செலுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு மின் கட்டணம் செலுத்தியதற்கான ஸ்கிரின்ஷாட்டையும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார். அதனுடன், அதிக மின் கட்டண உயர்வு காரணமாக மெழுகுவர்த்திகளுக்கு மாறி விடலாம் என்று நினைக்கிறேன் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பதிவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் எப்படி இவ்வளவு கட்டணம் வந்தது என கேள்வி எழுப்பி உள்ளனர். சில பயனர்கள் தங்கள் வீடுகளுக்கும் அதிகப்படியான மின் கட்டணம் செலுத்துவது குறித்து பதிவிட்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com