ஜார்க்கண்ட் போராட்டம்: அடையாளம் தெரியாத 500 மாணவர்கள் உட்பட 600 பேர்மீது வழக்குப்பதிவு!

திங்கள்கிழமையன்று ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை நோக்கி பேரணி சென்று, அதனை முற்றுகையிட முயன்றனர்.
ஜார்க்கண்ட் போராட்டம்: அடையாளம் தெரியாத 500 மாணவர்கள் உட்பட 600 பேர்மீது வழக்குப்பதிவு!
Published on

ஜார்க்கண்டில் அரசுப் பணி தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடிய 500 அடையாளம் தெரியாத மாணவர்கள் உட்பட மொத்தம் 600 பேர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

ராஞ்சியில் உள்ள சட்டமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியில் தடை உத்தரவுகளை மீறியது மற்றும் தடுப்புகளை உடைத்தது போன்ற காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போராட்டம்

ஜார்க்கண்ட் மாநில அரசால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், குளறுபடி நடந்த தேர்வுகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என மாணவர்கள் கடந்த 20 நாட்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ரகுபர் தாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மாணவர்களின் CBI விசாரணை கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, முறைகேடு புகார் எழுந்த 3 அரசுத் தேர்வுகளை ரத்து செய்ய ஜார்க்கண்ட் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை தங்களது உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் தொடரும் என மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் இப்போராட்டதின் ஒருபகுதியாக திங்கள்கிழமையன்று ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

600 போராட்டக்காரர்கள் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் 100 போராட்டக்காரர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அடையாளம் தெரியாத 500 மாணவர்கள் மற்றும் பிற போராட்டக்காரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com