

18 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் தற்போதைய நவீன காலத்தில் செல்போன்களை எளிதாக கையாள்கின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களை அவர்களால் தொடர்பு கொள்ள முடிகிறது. இதனால் சமூக வலைத்தளங்களில் உள்ள ஆட்சேபனைக்குரிய படங்கள், வீடியோக்களை சிறுவர்கள் பார்க்கும் நிலை ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு பெரும்பாலான நாடுகள் சிறுவர்கள் இன்டர்நெட் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகளும், தடைகளும் விதித்துள்ளன.
இந்தியாவில் தடைகள் இல்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் சிறுவர்களுக்கு ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் மற்றும் படங்களை வழங்கக்கூடாது என்று கடுமையாக எச்சரித்துள்ளது. இருந்தபோதிலும் அது போதுமானதாக இல்லை. அவர்களும் அதை சீரியஸாக கடைபிடிப்பதில்லை.
இதனால், உச்சநீதிமன்றம் சிறுவனர்கள் இன்டர்நெட் பயன்படுத்தும் வகையில் வயது தொடர்பான இன்டர்நெட் தடை விதிக்க வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. சந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் "அரசியலமைப்பின் 19(1)(a)-உடன் பிரிவு 21-ன்படி இணையத்தை அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்குமான உரிமை ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமையாகும் என்று கூறுவதில் எங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.
நமது குழந்தைகள், அவர்களின் வயது எதுவாக இருந்தாலும், சமமான உரிமைகளைப் பெறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு பாதுகாக்கப்பட வேண்டிய மனசாட்சியோ அல்லது வெளிப்படுத்தப்பட வேண்டிய கருத்து சுதந்திரமோ இல்லை என்று கூறுவது எவ்வளவு அபத்தமானதோ, அதேபோல அவர்களுக்கு உரிமைகளை முற்றிலுமாக மறுப்பதும் அவ்வளவு அபத்தமானதாகும்.
நமது குழந்தைகளின் பாதுகாப்பும் அவர்களின் சுதந்திரமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. நமது குழந்தைகளுக்கு இவை இரண்டுமே கிடைக்க உரிமை உண்டு" என்றனர்.